குருந்தூர்மலை பொங்கல் வழிபாட்டைத் தடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை! – முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை

Share

குருந்தூர்மலையில் நாளை வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் வழிபாட்டைத் தடுக்க எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டுள்ளது.

பதற்றம் ஏற்படலாம் என்று பொலிஸார் முன்வைத்த தடையுத்தரவு கோரிக்கையையும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

‘குருந்தூர்மலையில் நாளை பொங்கல் இடம்பெற்றால் இரண்டு குழுவினருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்தக் கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தைத் தடுப்பதற்கு மிகவும் கடினமாகும்’ என்று தெரிவித்து குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106 (01) கீழ் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் அறிக்கை ஒன்றைப் பொலிஸார் தாக்கல் செய்து பொங்கல் வழிபாட்டுக்கு எதிராகத் தடை உத்தரவைக் கோரினர்.

ஆனாலும் புராதன சின்னங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும், ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மத வழிபாடுகளைத் தடுக்கத் தடைக் கட்டளை வழங்க முடியாது என்று பொலிஸாரின் தடையுத்தரவுகே கோரிக்கையை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்தோடு பொங்கல் வழிபாட்டை விகாராதிபதி சாந்தபோதி தேரரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ அருண் சித்தார்த் என்பவரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ தடுக்க எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

இதேவேளை, குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தில் நாளை நடைபெறவுள்ள பொங்கல் விழாவின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைத் தொல்லியல் திணைக்களம் கடிதமாக வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு