ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் இணைந்து பயணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
குறைந்தபட்சம் 25 வருடங்களை இலக்காகக் கொண்ட தேசிய வேலைத்திட்டத்துக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவெனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
நாட்டின் எதிர்காலத்துக்காகவும் மக்களின் எதிர்காலத்துக்காகவும் ரணில் – சஜித் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும், அது நாட்டின் எதிர்காலத்துக்கான தேசிய தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.