பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவனே நேற்று (15) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பஹா, மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.