மாங்குளம் பகுதியில் கோர விபத்து! மூவர் சாவு!! – 8 பேர் காயம்

Share

ஏ – 9 பிரதான வீதியின் மாங்குளம் – பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வான் ஒன்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதுடன், குறித்த பாரவூர்தி அதன் முன்னால் இருந்த மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பாரவூர்திக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவரும் வானில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், குறித்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, வான் மற்றும் பார்வூர்திகளில் பயணித்த 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் யாழ்ப்பாணம், வெல்லம்பிட்டி மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 58, 46 மற்றும் 38 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/0eU_U-e72qw

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு