இனவாதம் கக்கி வன்முறையைத் தூண்ட எவருக்கும் அனுமதி இல்லை! – தினேஷ் திட்டவட்டம்

Share

இனவாதக் கருத்துக்கள் ஊடாக வன்முறையைத் தூண்ட இந்த நாட்டில் எவருக்கும் இனி அனுமதி இல்லை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

“இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு இரத்த ஆறு ஓடக் கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இன, மத பேதமின்றி நாம் செயற்பட வேண்டும். நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்” – என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அப்போதுதான் நல்லிணக்கம் இங்கு நிரந்தரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் வடக்கு, கிழக்குக்குச் செல்லவுள்ளதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்குத் திரும்பவுள்ளதாகவும்  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

https://youtu.be/0eU_U-e72qw

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு