இராவணன் சிங்கள மன்னனா? – தமிழரின் வரலாற்றை அழிக்கப் பௌத்த பேரினவாதம் கங்கணம் என்று ஸ்ரீநேசன் சீற்றம்

Share

“தமிழ் மன்னனான இராவணனைச் சிங்கள மன்னன் என்று சிங்கள – பௌத்த இனவாதிகள் கூறுகின்றமை தமிழர்களின் வரலாற்றைத் திரிபுபடுத்துகின்ற – தமிழர்களின் வரலாற்றை அழிக்கின்ற செயற்பாடாகும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற இராவணன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உரையாற்றும்போது, “இராவணன் மன்னன் இயக்கர் குலத்தைச் சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தைத் தூண்டிவிட முயற்சிக்கின்றார்கள். தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்றபோது இராணவனைத் தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்” – என்று தெரிவித்திருந்தார்.

சரத் வீரசேகர எம்.பியின் கருத்துக்குப் பதிலடி வழங்கும் வகையில் முன்னாள் எம்.பி. ஜி.ஸ்ரீநேசன் கருத்துரைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

https://youtu.be/KSJzcmcM3a4

“இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழ் மக்கள் தொடர்பான நான்கு வகையான அழிப்பு விடயங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் தமிழ் மன்னனான இராவணனைச் சிங்கள மன்னன் என்று சிங்கள – பௌத்த இனவாதிகள் கூறுகின்றமை தமிழர்களின் வரலாற்றைத் திரிபுபடுத்துகின்ற – தமிழர்களின் வரலாற்றை அழிக்கின்ற செயற்பாடாகும்.

தமிழினத்தை முற்றாக அழித்து இலங்கையைச் சிங்கள – பௌத்த நாடாக்க வேண்டும் எனப் பேரினவாதம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றது.

மொட்டுக் கட்சியோடு பயணிக்கின்ற – பேரினவாதக் கட்சிகளோடு பயணிக்கின்ற தமிழ்ப் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த தமிழின அழிப்புக்குப் பக்கபலமாக – ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

எனவே, தமிழ் மக்கள் நியாயமாக – ஆழமாகச் சிந்தித்து தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுகின்ற போராட்டத்தில் அணிசேர வேண்டும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சலுகைகளுக்காக உரிமைகளை விற்றுவிடக் கூடாது என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு