இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான ‘செனல் ஐ’ தொலைக்காட்சி, தனியார் நிறுவனமான லைக்கா குழுமத்துக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் இலங்கை தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்துக்கு மாதாந்தம் 25 மில்லியன் ரூபாவை வழங்குகின்றது என ‘அருண’ என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர் நட்டம் காரணமாக ‘செனல் ஐ’ தொலைக்காட்சியைத் தனியார் முதலீட்டாளரிடம் ஒப்படைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்திருந்தது. ‘செனல் ஐ’ தொலைக்காட்சி விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தையும் லைக்கா குழுமத்திடம் ஒப்படைக்க முன்மொழியப்பட்டுள்ளது.