தமிழ் முற்போக்குக் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் நடை பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நுவரெலியாவில் இருந்தும், ஹட்டனில் இருந்தும் ஆரம்பமாகியுள்ள பேரணி தலவாக்கலையில் சங்கமிக்கவுள்ளது.
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இருந்து சர்வமத வழிபாட்டுடன் ஆரம்பமான பேரணியில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நுவரெலியாவில் இருந்து ஆரம்பமான நடை பேரணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.வேலுகுமார், எம்.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.