13 இற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி!

Share

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இது நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கை. இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையை இரண்டாக பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காரணத்துக்காகவும் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென இதுராகாரே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த  முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டுமென அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு