உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: அரசியல் யாப்புக்கு முரணானது! – உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

Share

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள், நகர, மாநகர சபைகள் மற்றும் மாகாண சபைகள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றின் இந்த வியாக்கியானத்தைச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.

குறித்த திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் விசேட பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தச் சட்டமூலத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு