இ.தொ.காவின் ஆதரவைக் கோருகின்றது தமிழ் முற்போக்குக் கூட்டணி!

Share

தமிழ் முற்போக்குக் கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடை பயணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் அதனை வரவேற்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

தனியார் வானொலியொன்றில் ஒலிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் பழனி திகாம்பரம் எம்.பி. பங்கேற்றிருந்தார். இதன்போது, ‘தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் தற்போது சுமுகமான உறவு நிலவுகின்றது. உங்களின் பேரணிக்கு இ.தொ.கா.வின் ஆதரவு கோரப்பட்டுள்ளதா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே திகாம்பரம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

“நாம் பொதுவாக அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். வந்தால் (இ.தொ.கா.)வரவேற்போம். அவர்கள் (இ.தொ.கா.) நவம்பரில் ‘மலையகம் – 200’ நிகழ்வைச் செய்யவுள்ளனர். அதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம்” – என்றும் திகாம்பரம் எம்.பி. குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு