ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது சம்மேளனம் செப்டெம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான நிகழ்வுகளைப் பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காகக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தலைமையில் 14 பேர் அடங்கிய முகாமைத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, செயற்குழு உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழா மற்றும் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தக் குழு முன்னெடுக்கும்.