‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு தொடர்பான ஆவணத்தை பெறுவதற்காக, பதுளை, எல்ல பிரதேச செயலக வளாகத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நமுனுகுல , தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமசாமி குழந்தைவேலு (வயது 77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கிக் கணக்கைத் திறப்பதற்குப் பிரதேச செயலகம் ஊடாக கடிதம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தக் கடிதத்தை பெறுவதற்காக பிரதேச செயலகத்தின் முன்னால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தபோதே அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்” – என்று அப்பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.