மட்டு. தாந்தாமலை குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு!

Share

மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற குறித்த இளைஞர், தாந்தாமலை குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது இடைநடுவில் உயிரிழந்தார் என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி, எருவில் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தாந்தாமலை முருகள் ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று (26) களுவாஞ்சிக்குடி – எருவில் பிரதேச மக்கள் ஆலய வழிபாட்டுக்குச் சென்றனர்.

இதன்போது அங்கு சென்ற குறித்த இளைஞரும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடியபோது குறித்த இளைஞர் நீரிழ் முழுகியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு