முல்லைத்தீவு மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை தமிழர் தாயகத்தில் ஹர்த்தால்!

Share

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பேரணி ஒன்று, வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பேரணியில் கலந்துகொள்வோருக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என்பதுடன் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்க வேண்டும் எனவும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு