யாழ். இளைஞர் உட்பட மூன்று தமிழர்கள் நீர்கொழும்பு கடலில் மூழ்கிச் சாவு!

Share

நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கிச் சாவடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த வடிவேல் ஆனந்தகுமார் (வயது 23) ஆகியோரை இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் நீராடிய இவர்கள் மூவரும் காணாமல்போயினர்

இவர்களுடன் நீராடச் சென்ற மற்றோர் இளைஞர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு