பத்து கிலோ கேரள கஞ்சாவுடன் கடற்படைச் சிப்பாய் சிக்கினார்!

Share

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் வவுனியா நகரில் வைத்து இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து கேரள கஞ்சாவை பஸ்ஸில் கொண்டு வருவதாக வவுனியா தலைமையகப் பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த தகவலையடுத்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பஸ்ஸை நிறுத்திச் சோதனையிட்ட போது சந்தேகநபரிடம் இருந்து பொதிகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் தலா இரண்டு கிலோ எடையுள்ள 5 கேரள கஞ்சா பொதிகள் இருந்தன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு