ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு!

Share

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது.

இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டது என்று ஹரி ஆனந்தசங்கரி தனது ருவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

“சுதந்திரமான பேச்சு, அரசுக்குப் பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகின்றது. கொடும்பாவிகளை எரிப்பதால், இலங்கை அரசின் தொடர்ச்சியான தோல்விகளைச் சரி செய்ய முடியாது. வருந்தத்தக்க வகையில், இலங்கை எனது விசாவை மறுத்துவிட்டது. இது நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கலாகும். எனவே, நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” – என்று ஹரி ஆனந்தசங்கரி தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு