2023 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து ‘சுப்பர் 6’ சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுத் தொடரில் ‘சுப்பர் 6’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள அணிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.