யாழ்ப்பாணம், வல்லைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
வல்லை – தொண்டைமானாறு வீதியில் உள்ள வெளியில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என வல்வெட்டித்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகின்ற நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.