இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி! (Photos)

Share

உலகக் கிண்ணத்தின் தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகப்படியாக குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அலி நசீர் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 18 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில், 356 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரகம் 39 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியைத் தழுவியது.

அணி சார்பில் அதிகப்படியாக மொஹம்மட் வசீம் 39 ஓட்டங்களையும், விர்த்தியா அரவிந்த் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 11 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு