இறுதிப் போட்டிக்கு மும்பை அணி வரக்கூடாது! – இப்படி விரும்புகின்றார் பிராவோ

Share

ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் பிளே-ஓவ் சுற்றில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் இடம்பெற்றன.

இந்நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த சென்னை – குஜராத் அணிக்கு குவாலிபையர் சுற்று நடைபெற்றது.

இந்தப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 172 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்துக் களமிறங்கிய குஜராத் அணி டோனியின் சிறப்பான கப்டன்ஷிப்பால் 157 ஓட்டங்களில் ஓல் அவுட் ஆனது. இதனால் சென்னை அணி 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று எலிமினேட்டர் சுற்றில் மும்பை – லக்னோ அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 182 ஓட்டங்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 101 ஓட்டத்தில் சுருண்டது.

இதன்மூலம் குவாலிபையர் 2இல் குஜராத் அணியும் மும்பை அணியும் நாளை அகமதாபாத்தில் மோதவுள்ளது.

சென்னை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில் மும்பை அணியும் இறுதிப் போட்டிக்கு வரவேண்டும் என இரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி வரக்கூடாது என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ சிரித்தபடி கூறியுள்ளார்.

இதனைக் கிரிக்கெட் ரசிகர்கள் பயந்துட்டியா குமாரு என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ஐபிஎல் கிண்ணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும் சென்னை அணி நான்கு முறையும் கைப்பற்றியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு