ஜனாதிபதியுடனான பேச்சில் இரு மனதுடன் தமிழ்க் கட்சிகள் பங்கேற்கக் கூடாது! – மஹிந்த அறிவுரை

Share

“தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“‘பேச்சு வெற்றியடைய வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்க வேண்டும். அதைவிடுத்து வேண்டாவெறுப்புடன் எதிரணியின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பேச்சு தோல்வியடையும் என்ற எண்ணத்துடன் தமிழ்க் கட்சியினர் பங்கேற்றால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் காலமும் பின்தள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இரு மனநிலையுடன்தான் பேச்சுக்கு வந்தார்கள். அந்தப் பேச்சுக்கள் துரதிர்ஷ்டவசமாக இடைநடுவில் நின்றுபோயின. ஜனாதிபதியுடனான தற்போதைய பேச்சு வெற்றியளிக்க வேண்டும் என்பதுதான் ஆளும் கட்சியினராகிய எமது விருப்பம். இதற்கு எம்மாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு