தனுஷ்கோடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (Photos)

Share

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு போரின் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் உலகத் தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களால் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், இன்று மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட உருவப் படங்களை படகில் வைத்து கடலில் விட்ட பின்னர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, தங்களுடைய கண்டனத்தையும் அவர்கள் பதிவு செய்தனர்.

“முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும். மே 18 நினைவு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும்” – என்று அஞ்சலிக் கூட்டத்தில் அவர்கள் கருத்து வெளியிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு