வன்னியில் சிறுமியைக் கடத்த முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்த மக்கள்!

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – கைவேலிப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் இணைந்து சிறுமி ஒருவரைக் கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபரான இளைஞர் ஒருவரை மக்கள் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று கைவேலிப் பகுதியில் 10 வயதுடைய பாடசாலை சிறுமி தனியார் வகுப்புக்காக மோட்டார் சைக்கிளில் தாயாரினால் அழைத்து வரப்பட்டு இறக்கிவிடப்பட்ட நிலையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் சிறுமியை அழைத்து கையினைப் பிடித்துக்கொண்டு முகத்தைத் துணியால் பொத்திப் பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.

வீதியால் சென்ற மக்கள் இதனை அவதானித்து சத்தமிட்ட போது இளைஞர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளார்கள்.

சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்துக் கொண்ட சிறுமியின் தகவலின் படி குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் பெயரை சிறுமி கூறியதற்கு இணங்க கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் இளைஞரை மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 23 வயதுடைய 2 ஆம் வட்டாரம், கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு