மன்னார் பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக பட குமூலம், இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 6 பேர், கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்று சிறார்களும் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.