தையிட்டி போராட்டக் களத்தில் பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்றிரவு முதல் குறித்த பகுதிக்குள் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாதவாறு தடைகளைப் பொலிஸார் ஏற்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், போராட்டக் களத்துக்கு இன்று காலை வந்த பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு