திட்டமிட்டு நசுக்கப்படும் தொழிலாளர் போராட்டம்! – செங்கொடி சங்கம் கண்டனம்

Share

தொழிலாளர்களுக்கு எதிரான சகல வன்முறைகளையும் நிறுத்துமாறு இலங்கை செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இன்று தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு, உழைப்புக்கான ஊதியம், வேலைத்தள பாதுகாப்பு, கர்ப்பிணித் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.

வறுமை, போசாக்கின்மை, சிறுவர் கல்வி இடை விலகல், சிறுவர் உழைப்பு போன்றன அதிகரித்து வருகின்றன. இதனை எதிர்த்துச் செயற்படும் தொழிலாளர்களின் போராட்டங்களும் திட்டமிட்ட வகையில் நசுக்கப்பட்டு வருகின்றன.

200 ஆண்டுகளாக இந்த நாட்டுக்காகபி பாரிய பொருளாதாரத்தை உழைத்துக் கொடுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிரந்தர தொழில், தற்போது தற்காலிக தொழிலாக மாற்றம் அடைந்து வருகின்றது. அதேபோல் ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்களைக் கம்பனிகள் அடிமைகளாக நடத்தும் விதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

எனவே, இந்தச் செயற்பாடுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர சகல தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் பேதமின்றி ஒன்று திரள வேண்டும்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு