தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி எதிர்வரும் 7 ஆம் திகதி இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டைத் தொடங்குகின்றது.
இந்தச் சூழலில் தமிழக அமைச்சரவையின் 12ஆவது கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்ஜட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைச் செயற்படுத்தும் நடைமுறைகள் குறித்தும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது எனக் கூறப்படுகின்றது.