பொகவந்தலாவ – எல்பட தமிழ் வித்தியாலயத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை மாணவர்கள் பாடசாலைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை முதல் பாடசாலை வளாகத்தில் குளவிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் பாதுகாப்பு காரணமாக இன்று மாணவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் குளவிப் பிரச்சினை தொடர்வதாக அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.