பொலிஸாரைத் தலைக்கவசத்தால் தாக்கிய கடற்படைச் சிப்பாய் உட்பட இருவர் கைது!

Share

வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கிக் காயப்படுத்திய, குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று நேற்று மாலை சீதுவ பகுதியில் போக்குவரத்து வீதிச் சோதனை கடமையில் ஈடுபட்டிருந்தது.

அதன்போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டியுள்ளனர். அதனையும் மீறி சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்தும் பயணித்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த மோட்டார் சைக்கிளை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் துரத்திச் சென்று, சீதுவ நகருக்கு அருகில் தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில், சந்தேகநபர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்ததையடுத்து, அவர்களை மேலதிக விசாரணைக்காகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, ​​சந்தேகநபர்கள் தமது தலைக்கவசத்தால், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் தாக்கினர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த மற்றுமொரு பொலிஸ் குழுவினர், சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரியும் 25 வயதுடைய சிப்பாய் எனவும், மற்றைய சந்தேகநபர் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் பொலிஸ் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு