வைத்தியசாலையில் இளைஞர் கொலை: தம்பதியினர் சிக்கினர்!

Share

அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பிரதேசத்தைச் 27 வயதுடைய நபரும், 23 வயதான அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக மேலும் மூவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி இளைஞர் கடந்த 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு