3 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Share

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 75 மில்லிமீற்றர் வரையான மழை எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மழை காரணமாக பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகள், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளுக்கே இவ்வாறு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு