தெற்கில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு – வத்தளைப் பாலத்துக்கு அருகில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் பழுப்பு நிற சேலை மற்றும் வெள்ளை நிற நீண்ட கை சட்டை அணிந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வத்தளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.