திருமலையில் கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் சாவு!!

Share

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப்பித்திகொள்ளாவ பகுதியிலிருந்து கார் ஒன்று ஹொரவ்பொத்தான நோக்கி வந்து கொண்டிருந்த போது வீதியிலிருந்த மாட்டுடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காரில் பயணித்த மூவரில் ஒருவர் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் ஹொரவ்பொத்தான, மரதன்கடவல பகுதியை சேர்ந்த முனசிங்ககே ரோமின்த மதுபாசன (22 வயது ) மற்றும் ஹொரவ்பொத்தான – நிக்கவெவ சந்தியில் வசித்து வரும் ரன்னஹென்னகே சதறு பிரபாஷன (19 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் படுகாயமடைந்த 30 வயதுடைய நபர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு