சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணி தொடர்ந்தும் 7ஆவது இடத்தில் உள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
அத்துடன், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, முதலாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாம் இடத்தில் இந்திய அணியும், மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்க அணி நான்காவது இடத்திலும், நியூஸிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கை அணி 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.