சிறந்த தலைவருக்கு நாம் எப்போதும் பேராதரவு! – மஹிந்த தெரிவிப்பு

Share

சிறந்த தலைவருக்கு நாம் எப்போதும் முழு ஆதரவு வழங்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கண்டிக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச, தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் அவர் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

“மக்கள் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்குத் தீர்வை வழங்கக் கூடிய எந்தவொரு நபருக்கும் நாம் முழுமையான ஆதரவு வழங்குவோம்” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘பிரதமர் பதவியை மீண்டும் எப்போது பொறுப்பேற்கவுள்ளீர்கள்?’ என்ற கேள்விக்கு அவர் நேரடிப் பதில் எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு