“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதியாகப் பதவியேற்கப் பலருக்குத் தகுதி உண்டு. எனினும், அடுத்த தேர்தலில் எமது கட்சி எந்த வேட்பாளரைக் களமிறக்குகின்றதோ அவருக்கே நான் ஆதரவு வழங்குவேன்.”
– இவ்வாறு மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கட்சி சார்பில் வேட்பாளரைக் களமிறக்கும் அல்லது பொது வேட்பாளரைக் களமிறக்கும். இது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.
எனினும், எமது கட்சி எந்த வேட்பாளரைக் களமிறக்கின்றதோ அவருக்கே நான் ஆதரவு வழங்குவேன். கட்சியின் தீர்மானத்தை மீறி நாம் செயற்பட முடியாது.” – என்றார்.