இரசாயனப் பசளைத் தடைக்கு எதிராகக் கருத்து வெளியிட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து தம்மை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை அச்சுறுத்தினார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டில் உள்ள வைத்தியர்கள் தவறான ஆலோசனைகளை வழங்கினர்.
இராசயனப் பசளை பயன்பாடு காரணமாக சிறுநீரக நோய் ஏற்படுகின்றது எனவும், இதன்காரணமாக சேதன பசளையைப் பயன்படுத்துமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினர்.
இது தொடர்பாக தாம் வழங்கிய ஆலோசனைகளை கோட்டாபய ராஜபக்ச ஏற்கவில்லை.” – என்றார்.