“பிரதான எதிர்க்கட்சிகள் இனியும் தலைதூக்கும் நிலைமை வராது. எல்லோரும் ஒன்றிணைந்து தேசிய இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஆசியாவின் முன்னேற்றமடைந்த நாடாக இலங்கை மாற வேண்டும் என்றால் எல்லோரும் தேசிய இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள எம்.பிக்கள் பலர் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசியுள்ளார்கள். என்னுடனும் பேசியுள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியை உடைத்து எடுப்பதல்ல இதன் நோக்கம். தேசிய இணக்கப்பாடுதான் எமது குறிக்கோள்.” – என்றார்.