ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் இணைவதற்கு முடிவெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் கொழும்பில் 5 தடவைகள் இரகசியச் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
அரசுடன் இணைவது தொடர்பில் பல விடயங்கள் இந்தச் சந்திப்புக்களின்போது பேசப்பட்டுள்ளன.
இறுதியாக நடைபெற்ற சந்திப்பில் அனைவரும் ஒரே தடவையில் குழுவாகச் சென்று அரசுடன் இணைவதா அல்லது கட்டம் கட்டமாக இணைவதா என்பது தொடர்பில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது.
சகலரும் ஒரே தடவையில் அரசுடன் இணைந்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாஸ மாத்திரமே மிஞ்சுவார் என்று இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.