கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
சிலை அகற்றப்பட்ட விடயத்தைக் கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள்.
அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு விட்டதாக கடற்படையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என்று யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
அத்துடன், அது தொடர்பில் யாழ். மாவட்ட செயலருக்குக் கடிதம் மூலம் ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் நன்றி தெரிவித்துள்ளார்.