ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இப்போதே வரிசையில்!

Share

திகதி குறிப்பிடப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்போதே வேட்பாளர்கள் முட்டி மோதுகின்றனர் என்றும், தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறப்போவது 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமாகும். இருந்தாலும், நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்று அதற்கு முன் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகின்றார் என்று அரச வட்டாரம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி ஒருவர் நான்கு வாருடங்கள் அவரது பதவிக் காலத்தைக் கழித்த பின் தேர்தலுக்குச் செல்வதற்கான அவரது விருப்பத்தை அறிவிக்க முடியும். ஆனால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால ஜனாதிபதியாக இருப்பதால் சட்ட ரீதியாக அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளும் வேட்பாளர்கள் தயாராவதும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

மொட்டுத் தரப்பில் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியில் அநுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மைத்திரிபால சிறிசேன உட்பட ஏனைய கட்சிகளிலும் வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு