ரணில் தலைமையில் நாடு மறுமலர்ச்சி அடைந்தே தீரும்! – அலி சப்ரி நம்பிக்கை

Share

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் மறுமலர்ச்சி அடைந்தே தீரும்” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இப்போதிருக்கின்ற தலைவர்களுள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகச் சிறந்த தலைவர். அவரது வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சில காலம் வழங்கப்பட வேண்டும்.

நான் இருக்கின்ற முகாமை விட்டுப் போகின்றவன் அல்லன். எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது.

நான் இதற்கு முன் அவருக்கு எதிராகவே வேலை செய்தேன். இப்போதுதான் அவருடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அவர் பற்றி நாம் தவறாகப் புரிந்து வைத்திருந்தோம் என்பது அவருடன் இப்போது இணைந்து செயலாற்றும் போது புரிகின்றது.

பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, வெளிவிவகார கொள்கை போன்றவற்றில் ஜனாதிபதி ரணிலுக்கு விரிவான அறிவு உண்டு.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு