உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார்.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருநாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி ஆண்டகையிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அனுமதியுடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.