“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற சிங்கள – பௌத்த மயமாக்கலைக் கண்டித்தும் நாளை செவ்வாய்க்கிழமை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கில் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, நாளைய வடக்கு – கிழக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாணக்கியன் எம்.பி. இன்று வழங்கினார்.