இன்று கூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபை சட்டபூர்வமானது அல்ல எனக் கட்சியின் முன்னாள் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கடிதத் தலைப்பின் கீழ் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஆரம்பமானது.
இதன்போது பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.