ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உத்துராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொட்டுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போதே புதிய தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொட்டுக் கட்சியின் தவிசாளராகச் செயற்பட்டு வந்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தற்போது டலஸ் அணி பக்கம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.