குண்டுத் தாக்குதல் குறித்து போலித் தகவல் வழங்கிய மௌலவி சிக்கினார்!

Share

அக்குரணைப் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனத் தொலைபேசியூடாகப் போலித் தகவல் வழங்கினார் எனக் கூறப்படும் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாரிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனவும், அவர் மௌலவியாகச் செயற்படுகின்றார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தான் வழங்கியது போலித் தகவல் எனச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இரண்டு தகவல்களையும் குறித்த நபரே வழங்கியுள்ளார் எனவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு