அம்பாறை மாவட்டம், பண்டாரதுவ – மாயதுன்ன பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
15 வயதுடைய குறித்த மாணவன் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மாணவன் உடனே அம்பாறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவனின் சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.